கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் உணவுகள் - இதய நோய்க்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய காரணம் #815562

di Owen Jones

Tektime

(Ancora nessuna recensione) Scrivi una recensione
3,49€

Leggi l'anteprima

இன்றைய காலகட்டத்தில் அதிகம் பேசப்படும் வார்த்தைகளில் ஒன்று கொலஸ்ட்ரால், ஏனெனில் கொலஸ்ட்ரால் வாழ்விற்கும் உயிர் இழப்பிற்கும் இடையில் நிற்கிறது. இருப்பினும், அதைப்பற்றிப் பல கூற்றுக்கள் பிரபலமாக இருக்கின்றன. உணவுப் பழக்கம் என்று வரும்போது, எதைச் சாப்பிடுவது, எதைத் தவிர்ப்பது என நாம் முடிவெடுக்க மிகவும் சிரமப்படுகிறோம். அடிப்படையில் கொலஸ்ட்ரால் என்பது, நமது உடலில் மற்றும் சில வகையான உணவுப்பொருட்களில் காணப்படும் மெழுகு போன்ற கொழுப்பு. இது உயிர் அணு சவ்வுகளின் உருவாக்கம், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் D உற்பத்தி போன்ற உடலியல் செயல்முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரதானமாகக் குறை-அடர்த்தி லிப்போ புரதங்கள் (LDL) மற்றும் உயர்-அடர்த்தி லிப்போ புரதங்கள் (HDL) ஆகிய இரண்டு வகை கொழுப்புப் புரதங்களால், கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. கொலஸ்ட்ரால் நமது உடலுக்கு அத்தியாவசியமானது என்றபோதிலும், மிகை அளவு LDL கொலஸ்ட்ரால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களுக்கு வழிவகுக்கும். நிறைவுற்றகொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவை உண்பது, உடற்பயிற்சியின்மை மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் போன்ற வாழ்க்கை முறைகள், கொலஸ்ட்ரால் அளவை ஆரோக்கியம் பாதிக்கும் அளவிற்கு அதிகரிக்கும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் இலைப் புரதங்கள் போன்ற இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். தெவிட்டிய கொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு அதிகம் இருக்கும் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது போன்ற செயல்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். தேவைப்பட்டால், இதய நோய்ப் பாதிப்புகளைத் தவிர்த்து, ஒட்டுமொத்த உடல் நலத்திற்காக மருத்துவர்கள் / உடல் நல வல்லுநர்கள், வாழ்க்கை முறை மாற்றங்களுடன், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். கொலஸ்ட்ரால் அளவை அடிக்கடி பரிசோதிப்பது, அளவு அதிகரிப்பதை ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கவும் அதைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தவும் உதவும். நான் ஒரு மருத்துவர் / உடல் நல வல்லுநர் அல்ல, இருப்பினும் இந்தத் தலைப்பைப்பற்றி நிறையப் படித்து, ஆராய்ந்து அதன் பிறகு தான் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறேன். இந்தத் தலைப்பைப்பற்றி நீங்கள் ஆழமாகச் சிந்திக்கவும் மருத்துவ ஆலோசனை தேவையா எனப் புரிந்துகொள்ளவும் இந்த புத்தகம் உதவும்.

PUBLISHER: TEKTIME
Aggiunta al carrello in corso… L'articolo è stato aggiunto

Con l'acquisto di libri digitali il download è immediato: non ci sono costi di spedizione

Altre informazioni:

ISBN:
9788835464471
Formato:
ebook
Editore:
Tektime
Anno di pubblicazione:
2024
Dimensione:
312 KB
Protezione:
nessuna
Lingua:
Altre lingue
Autori:
Owen Jones