குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது - வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது. #698965

di Owen Jones

Tektime

(Ancora nessuna recensione) Scrivi una recensione
3,99€

Leggi l'anteprima

குறட்டை ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் பாதிப்புகள் மற்றும் அதற்கு கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகள் போன்ற குறட்டை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. உடல் எடைக் குறைப்பு மற்றும் தூங்கப் போவதற்கு முன் மது அருந்துவதைத் தவிர்ப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய மூக்கின் மேல் ஒட்டக்கூடிய பட்டைகள் (நேசல் ஸ்ட்ரிப்) மற்றும் ஈரப்பதத்தை அதிகரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தெரிந்துகொள்வோம். மேலும் அறுவை சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான நேர்மறை காற்று பாதை அழுத்த (CPAP) சிகிச்சை போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம். குறட்டை ஏற்படுவதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிவது மற்றும் அதற்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவ சேவை வழங்குநருடன் எவ்வாறு ஆலோசிப்பது போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம். மேலும், குறட்டை விடும் நபர் மற்றும் அவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள்ளும் துணைவரின் தூக்கத் தரத்தை மேம்படுத்துவது, குறட்டை விடுவதினால் உறவில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் வசதியான மற்றும் உகந்த சூழலை

அமேசான் தளத்தில் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் நூலாசிரியர்களில் ஒருவர் ஓவன் ஜோன்ஸ், இவர் வேல்ஸ் நாட்டின் பாரி நகரத்தைச் சேர்ந்தவர், இவர் பல நாடுகளில் வசித்திருக்கிறார் மேலும் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ௧௯ 70 ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியத்தில் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, ​​அவர் உளவாளிகளுடன் தொடர்ந்து பழகினார். பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்குப் பிறகு, சுரினாம் நாட்டில், ​​1982 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அவருக்குத் தொடர்பிருக்கிறது மற்றும் அவர் கூலிப்படையை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். பின்னர், ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தபோது, ​​பாலைவனப் புயல் ஏற்பட்டபோது பாரி நகரிலிருந்து ஜிப்ரால்டருக்கு நான்கு பேர் பயணம் செய்த குழுவில் துடுப்பு வளிக்கும் அடிமையாக பயணம் செய்தார் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் படகில் அவர்கள் பயணம் செய்தார்கள். அந்தப் பயணத்தின் போது, ​​அவர்கள் பயணித்த படகு ஏறக்குறைய ஒரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் - தி அட்லாண்டிக் சேலஞ்சர் ஆகியவற்றில் மோதியது. 2004 ஆம் அண்டு முதல், அவர் பெரும்பாலும் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தாய்லாந்து நாட்டில் வசித்தார். அவர் இப்போது தனது மனைவியுடன் அவரது ஆள் அரவமற்ற வடக்கு பகுதியில் இருக்கும் விவசாய கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார் மேலும் கதை எழுதுவது மற்றும் அவர் எழுதிய கதைகளை அதிகளவில் மொழிபெயர்ப்பு செய்வது போன்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

PUBLISHER: TEKTIME
Aggiunta al carrello in corso… L'articolo è stato aggiunto

Con l'acquisto di libri digitali il download è immediato: non ci sono costi di spedizione

Altre informazioni:

ISBN:
9788835450382
Formato:
ebook
Editore:
Tektime
Anno di pubblicazione:
2023
Dimensione:
171 KB
Protezione:
nessuna
Lingua:
Altre lingue
Autori:
Owen Jones